கடந்த மாதம் பிரதமர் மோடி-அதிபர் டிரம்ப் நியுயார்க்கில் சந்தித்தபோது இருநாட்டு அதிகாரிகளும் வர்த்தக உடன்படிக்கை எதையும் அறிவிக்க இயலவில்லை. இருதரப்பிலும் சில முரண்பாடுகள் நீடித்துள்ளன.
மூட்டு வலி போன்ற பிரச்சினைகளுக்கான மருத்துவ உப சாதனங்களை இந்தியாவில் விற்பனை செய்ய விரும்பும் அமெரிக்கா அதற்கான சில சலுகைகளை இந்தியாவிடம் எதிர்பார்த்துள்ளது.
இதே போல் தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்திற்கான சந்தையை இந்தியாவில் விரிவாக்கம் செய்யவும் அமெரிக்கா விரும்புகிறது. பால் பண்ணை பொருட்கள் மீது விலை வரம்பை நீக்கவும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
இந்தியா நியாயமான வர்த்தக உடன்படிக்கையில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. பிரதமரின் அமெரிக்கப் பயணத்தின் போது இதுதொடர்பாக இரு தரப்பிலும் உடன்பாடு எட்டப்படவில்லை என்றாலும் விரைவில் உடன்பாடு எட்டப்படும் என்று நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
