முத்தலாக் தடுப்பு சட்டத்திருத்த மசோதாமீது இன்று மக்களவையில் விவாதம்நடைபெற உள்ளது.
இதனால் பாஜக எம்பிக்கள் அனைவரும் தவறாமல் இன்று மக்களவைக்கு வரும்படி கட்சி கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மோடி ஆட்சியில் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபோதும், எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்பால் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. காங்கிரஸ், திரிணாமூல், திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தின. இந்நிலையில் மக்களவையில் இன்று இந்த மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புக் கொண்டுள்ளது.
மாநிலங்களவையிலும் பாஜக எம்பிக்கள் இன்று முழு அளவில் பங்கேற்க கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. தகவல் அறியும் சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் மாநிலங்களவையிலும் இதனை நிறைவேற்ற சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுடன் மத்திய அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
WhatsApp us