பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்க கூடுதலாக 6 மாத கால அவகாசம் வேண்டும் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், 2 ஆண்டுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று 2017ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. உச்ச நீதிமன்றம் வழங்கிய 2 ஆண்டு கால அவகாசம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தற்போது வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், வழக்கு விசாரணையை முடிப்பதற்கு கூடுதலாக 6 மாதம் அவகாசம் தர வேண்டும் என்று கேட்டு இருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இதுகுறித்து 19ம் தேதி பதிலளிக்க வேண்டும் என உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
