அயோத்தி பிரச்சனையை 24 மணி நேரத்தில் தங்களால் தீர்க்க முடியும் என்று உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
ராமர் கோவில் விவகாரத்தில் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் உச்சநீதிமன்றம் விரைவாக தீர்ப்பை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேவை இல்லாமல் இதில் காலம் தாழ்த்தக் கூடாது என்றும் மக்களின் பொறுமையை சோதிக்கக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். இல்லை என்றால் இந்த விவகாரத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அதை 24 மணி நேரத்தில் தீர்க்க தங்களால் முடியும் என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 25 மணி நேரம் எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.