அயோத்தி வழக்கில், முஸ்லீம்களுக்காக 45 ஆண்டுகளாக, தொடர்ந்து ஆஜரானாலும், அதற்காக ஒருபோதும் வருத்தமோ, சோர்வோ அடைந்ததில்லை என உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜபார்யாப் ஜிலானி(Zafaryab Jilani) கூறியிருக்கிறார்.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில், 1975ஆம் ஆண்டு அயோத்தி தொடர்பான வழக்குத் தொடரப்பட்ட நாள் முதல், அந்த வழக்கில், மூத்த வழக்கறிஞர் ஜபார்யாப் ஜிலானிஆஜராகி வருகிறார்.
இதுபற்றி பேசிய அவர், நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், 1948ஆம் ஆண்டு பூட்டப்பட்ட பாபர் மசூதி, 1983ல் விஷ்வ ஹிந்து பரிசத் ரதயாத்திரைக்குப் பின்னர், 1986ல் ஃபைசாபாத் மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவால், திறக்கப்பட்டதாகவும், அதுநாள் முதல், அயோத்தி வழக்கு சூடுபிடித்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, தன்னை வேதனையில் ஆழ்த்தவிட்டதாக அவர் நினைவு கூர்ந்துள்ளார். தற்போது, அயோத்தி வழக்கு, தீர்ப்பு என்ற முக்கியமான காலக்கட்டத்தில் இருப்பதால், தாம் மிகவும் நிம்மதியாக இருப்பதாக ஜபார்யாப் ஜிலானி தெரிவித்திருக்கிறார்.
WhatsApp us