நிறை புத்தரிசி பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது.
வறட்சி நீங்கி விவசாயம் செழிக்கவும், வீடுகளில் செல்வம் பெருகவும் ஆண்டுதோறும் ஆடிமாதம் இந்த பூஜை நடத்தப்படுகிறது.
நிறை புத்தரிசி பூஜை 7ந் தேதி நடைபெறுவதையொட்டி, நாளை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. புதன்கிழமை அதிகாலை பூஜையும், மாலையில் புஷ்பாபிஷேகமும் நடைபெற்றபின் இரவில் நடை சாத்தப்படும்.
ஆவணி மாத பூஜைக்காக வரும் 16ந் தேதி மீண்டும் நடை திறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
WhatsApp us