பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் வட மாநிலங்களின் பல இடங்களிலும் உணரப்பட்டது.
ஸ்ரீநகரில் இருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் நியூ மிர்பூர் நகரத்துக்கு அருகில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 8 ஆக பதிவான இந்த நில அதிர்வு, டெல்லி, நொய்டா, சண்டிகர், காஷ்மீர், இமாச்சலத்தின் சில இடங்களிலும் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் கைபர் பக்துன்(Khyber Pakhtun) உள்ளிட்ட நகரங்களிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள நியூ மிர்பூர் நகரத்தில் நிலநடுக்கத்தால் வீடு, சாலைகளில் ஏற்பட்ட விரிசல்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்ததை விவரிக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் உள்பட மற்ற வடமாநிலங்களில் நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
WhatsApp us