தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி இன்று நாடு முழுவதும் வாக்காளர் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இதனை திறந்து வைத்தார்.
வாக்காளர்களின் உதவிக்கு இலவச அழைப்பு எண் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபட்டிருந்ததால் நாடு முழுவதும் ஒரே எண் கொண்டுவர திட்டமிடப்பட்டது. அதன்படி இன்று 1950 என்ற இலவச உதவு மைய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் 1950 என்ற எண்ணை அழுத்தி உதவி பெறலாம்.
பிற மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் அந்தந்த ஊர் எஸ்.டி.டி. கோட் நம்பருக்குப் பின் 1950 என்ற எண்ணை பதிவிட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.
