தேசிய வாக்களர்கள் தினமான இன்று சென்னையில் உள்ள கல்லூரில் ஒன்றில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாணவர்களிடையே உரையாடினார். அப்போது , ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்று கூறினார்.
”நம்மை முதலில் சுத்தம் செய்ய வேண்டும்.அதன் பிறகு அரசை சுத்தம் செய்யலாம்.
நாற்காலியில் உட்கார்ந்ததும் அதை பிடித்துக்கொண்டு விடமால் இருக்க கூடாது.
கையாடல், ஊழல், பிட்பாக்கெட் செய்யும் அனைவருமே திருடர்கள் தான்.” என்றார் கமல்.
ஓட்டிற்காக பணம் வாங்குவதை முதலில் நிறுத்த வேண்டும் என மாணவர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை அளித்தார்.
”ஓட்டிற்காக பணம் வாங்கி பயன் இல்லை.ஓட்டிற்காக மக்கள் பாக்கெட்டில் இருந்தே பணம் எடுத்து, அதை அவர்களுக்கே திருப்பி கொடுக்கிறார்கள். மாணவர்கள் பணம் வாங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வாறு தடுத்தால் நல்ல ஆட்சி உருவாகும். அதன்பிறகு, அந்த பணம் அவர்களுக்கே நல்ல வழியில் திரும்பி வரும். திருடுவதை நிறுத்தினால், அனைத்தையும் செய்ய முடியும்.
தற்போது 60 சதவிகதம் கலவுதான் போகிறது. ”
வாக்கு கேட்க வருபவர்கள் என்ன வாக்குறுதி அளிக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.
அதுபோன்ற நல்ல வாக்குறுதியை மக்கள் நீதி மய்யம் அளிக்கும் என்று உறுதி அளிக்கிறேன். உங்கள் பணத்தை 100 மடங்காக்க மக்கள் நீதி மய்யம் செயல்படும் என்றும் கமல் கூறினார்.
மேலும், நான் 30 ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வந்திருந்தால் தற்போதைய அவலநிலை மாறியிருக்கும் என்றார்.