கியர் இல்லாத மின்னணு ஸ்கூட்டர், பைக் போன்ற இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு 16 வயதுடையவர்களுக்கு லைசன்ஸ் வழங்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையில், மோட்டார் வாகன சட்டத்திருத்தங்கள் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் 16 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு லைசன்ஸ் வழங்குவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
70 கிலோ மீட்டர் வேகத்திற்குட்பட்ட மின்சாரத்தால் இயங்கும் கியர் இல்லாத பைக், ஸ்கூட்டர்களை ஓட்ட லைசன்ஸ் வழங்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தியடையாத பதின் பருவத்தினர் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவது குறித்த நீண்ட கால பிரச்சனைக்கு இந்த மாற்றம் தீர்வு காணும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
WhatsApp us