நாகை மாவட்டம் வலிவலத்தில், கஜா புயலால் இழந்த லட்சக்கணக்கான மரங்களுக்கு பதிலாக தனியார் அமைப்பு சார்பாக சுமார் 2500 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. கஜா புயலால் இழந்த மரங்களை மீட்கும் முயற்சியில் வனம் என்ற தன்னார்வ அமைப்பு ஈடுபட்டுவருகிறது.
இந்நிலையில், அவ்வமைப்பு சார்பாக வலிவலம் கிராமத்தில் மரக்கன்றுகளை நட ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில், கொய்யா, நெல்லி, புங்கன்,வேம்பு, நீர்மருது, நாவல், பலா, சீத்தா, இலுப்பை, வேங்கை மற்றும் மாதுளை உள்ளிட்ட 70 வகையான 2500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
WhatsApp us