மொத்தமுள்ள 4 ஆயிரத்து 378 நகரங்களில் 756 நகரங்களில் நீர் பற்றாக்குறை உள்ளதாக நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகமும், ஜல்சக்தி அமைச்சகமும் பட்டியலிட்டுள்ளது.
அதில், அதிக நீர்ப்பற்றாக்குறை நகரங்களின் எண்ணிக்கையுள்ள மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தை அடுத்தே ராஜஸ்தான் இடம்பெற்றுள்ளது. மூன்றாம் இடத்தில் நாட்டிலேயே அதிக மக்கள் தொகை உள்ள உத்தரப்பிரதேசம் இடம் பெற்றுள்ளது.
மழை நீரை சேமிக்கும் வசதியுள்ள புதிய கட்டிடங்களுக்கே குடியேறுவதற்கான அனுமதி அளித்தல், மழை நீர் சேகரிப்பை அமல்படுத்த உத்தரவிடுவதோடு அதை திறம்பட கண்காணித்தல், நீர் நிலைகளைத் தூர்வாருதல், நீரை சுத்திகரித்தல் மற்றும் மறுசுழற்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
WhatsApp us