TAMIL

பெரும்பான்மை பலத்தை குமாரசாமி அரசு இழந்த நிலையில் காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா என தகவல்

கர்நாடகத்தில் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ் விலக்கிக் கொண்டதால், காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி கவிழும் அபாயம் அதிகரித்துள்ளது. அதேசமயம், அமைச்சர் பதவிகளை அளிப்பதன் மூலம், ராஜினாமா கடிதம் அளித்துள்ள 13 எம்எல்ஏக்களை இழுக்க காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில், பெரும்பான்மைக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. காங்கிரசுக்கு, சபாநாயகரையும் சேர்த்து 79 உறுப்பினர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 37 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த ஆளும் கூட்டணிக்கு 2 சுயேச்சைகளும், ஒரு பகுஜன்சமாஜ் உறுப்பினர் ஆதரவும் இருந்தது. இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 13 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். இவை சபாநாயகரால் ஏற்கப்பட்டால் அவையின் பலம் 211 ஆகக் குறைந்துவிடுகிறது. அப்போது பெரும்பான்மைக்கு 106 உறுப்பினர்கள் தேவை. 13 எம்எல்ஏக்கள் ராஜினாமாவுக்குப் பிறகு காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியின் பலம் 105 ஆக குறைந்துவிடுவதால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சி கவிழ்ந்துவிடும். இந்த நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் வகையில், சுயேச்சை எம்எல்ஏக்களில் ஒருவரும், அமைச்சருமான நாகேஷ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளார். பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிப்பதாக ஆளுநர் வஜுபாய்வாலாவிடம் கடிதம் அளித்துள்ளார்.

105 உறுப்பினர்களை பெற்றுள்ள பாஜக, சுயேச்சை எம்எல்ஏவின் ஆதரவைப் பெற்றுவிட்டதால், 106 என்ற பெரும்பான்மைக்கு தேவையான பலத்துடன் உள்ளது. ஆனால் இந்த நிலை, 13 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்பாரா இல்லையா என்பதைத் பொறுத்தது. சபாநாயகரை தொடர்பு கொள்ள முடியவில்லை, அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை என்று கர்நாடக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, அமைச்சர் பதவிகளை அளிப்பதன் மூலம், ராஜினாமா கடிதம் அளித்துள்ள 13 எம்எல்ஏக்களை இழுக்க காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. ராஜினாமா கடிதம் அளித்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 4 பேர், துணை முதலமைச்சர் பரமேஸ்வராவுடனான கருத்து வேறுபாடு காரணமாகவே ராஜினாமா முடிவு எடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி அளிக்க வசதியாக, ஏற்கெனவே காங்கிரஸ் சார்பில் அமைச்சர்களாக உள்ளவர்கள் பதவி விலக தயார் என துணை முதலமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்திருந்தார். அவரது இல்லத்தில் முன்னணி தலைவர்கள் இன்று காலை கூடி ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்கள் முதலமைச்சர் குமாரசாமியிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜினாமா செய்த 13 எம்எல்ஏக்களும் திரும்பி வந்தால் அவர்களுக்கு அமைச்சர் பதவி உறுதி என்பதை காட்டவே, காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா கடிதங்களை கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதேசமயம், எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பாவும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் அமைச்சர் ஷோபா, குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதால் உடனடியாக பதவி விலகவேண்டும் என வலியுறுத்தினார்.

30 Comments

30 Comments

  1. Pingback: Research

  2. Pingback: Jelle Hoffenaar

  3. Pingback: 메이저바카라

  4. Pingback: the dark knight extramovies

  5. Pingback: สินเชื่อ สุรินทร์

  6. Pingback: Tattoo Supplies

  7. Pingback: lo de online

  8. Pingback: 먹튀검증

  9. Pingback: taxi cheltenham to birmingham airport

  10. Pingback: dentalman.biz

  11. Pingback: Functional Testing Solutions

  12. Pingback: best cbd reddit

  13. Pingback: Customized ERP Software Company in Canada

  14. Pingback: 메이저토토사이트

  15. Pingback: Study in Uganda

  16. Pingback: audit instagram account

  17. Pingback: dark fox market link

  18. Pingback: Pink Runtz

  19. Pingback: ballon bleu de cartier moon phase once in a blue moon

  20. Pingback: Live Shemale Sex Dolls

  21. Pingback: Webcam Sex Plombier

  22. Pingback: DevOps service providers

  23. Pingback: putas

  24. Pingback: sbo

  25. Pingback: ดูหนัง

  26. Pingback: jettes un coup d'oeil à

  27. Pingback: see here now

  28. Pingback: view

  29. Pingback: get paid for using apps

  30. Pingback: ติดเน็ต ais

Leave a Reply

Your email address will not be published.

fifteen − 14 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us