நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வருகிற பிப்.12ல் வாஜ்பாய் படத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 12ந் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளார்.
சபாநாயர் சுமித்ரா மகாஜன், துணை சபாநாயகர் தம்பித்துரை, காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. 3 முறை பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு உயரிய விருதான பாரத் ரத்னா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
WhatsApp us