கால்நடை மருத்துவத்துறையில் காலியாக உள்ள உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கால்நடை மருத்துவத்துறையில் காலியாக உள்ள ஆயிரத்து 1141 நிபுணர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், தஞ்சை உள்ளிட்ட ஏழு தேர்வு மையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது எனவும், தற்பொழுது அந்த தேர்வுகள் சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடத்த தேர்வாணையம் முடிவெடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்து பிற தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்தவர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.