ஆட்டோமொபைல் துறை சரிவை சந்தித்து வரும் நிலையில், செப்டம்பர் மாதத்தில் வாகனப் பதிவும் 12.9 விழுக்காடு அளவுக்கு சரிந்துள்ளது.
ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள மாதாந்திர வாகனப் பதிவு தரவுகளில், இந்த சரிவு தெரிய வந்துள்ளது. அதன்படி மொத்த வாகனப் பதிவு 12.9 சதவீதம் அளவுக்கும், இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்படுவது 12.1 விழுக்காடு அளவுக்கும் சரிந்துள்ளது.
வணிக பயன்பாட்டு வாகனப் பதிவை பொறுத்தவரை 18. 5 விழுக்காடு அளவுக்கும், பயணிகள் வாகனப் பதிவு 20.1 விழுக்காடு அளவுக்கும் சரிந்துள்ளது.
வாகன விற்பனையும், பதிவும் சரிந்துள்ளதால் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பயணிகள் வாகன இருப்பு சற்றே உயர்ந்துள்ள நிலையில், இரு சக்கர வாகன இருப்பு மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அதே சமயம் மூன்று சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்படுவது 1.8 விழுக்காடு அளவுக்கு உயர்ந்துள்ளது.