பஞ்சாபி திவாஸ் 2019 விழா பஹ்ரைனில் உள்ள இந்திய பள்ளியில் கொண்டாப்பட்டது. அப்பள்ளியில் உள்ள பஞ்சாபி மொழித்துறை இந்த விழாவை நடத்தியது.
சிறப்பு விருந்தினர் திலக் சின்ஹா துவா இவ்விழாவை குத்துவிழக்கேற்றி துவக்கிவைத்தார். மேலும், அவருடன் ஜஸ்பிர் சிங் ( செயலாளர், குருத்வாரா குருமட் வித்திய கேந்திரா) , ஐஎஸ்பி துணை செயலாளர் பிரேமலதா, முகமது குர்சீத் அலாம், முதல்வர் விஆர் பழனிசாமி, துணை முதல்வர் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பஞ்சாப் மற்றும் பஞ்சாப் மொழி நாட்டின் முக்கிய துறைகளில் எப்படி பங்கெடுக்கிறது என்பது குறித்து சிறப்பு விருந்தினர் திலக் பேசினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பஞ்சாப் தின கொண்டாட்ட நடத்துவதற்கான முயற்சியை பாராட்டினார். ஜஸ்பிர் சிங் பேசுகையில் பஞ்சாப் மொழியின் சிறப்பு குறித்தும், அதன் பங்களிப்பு குறித்தும் கூறினார். அலாம் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். இந்திய சுதந்திர போராட்டத்தில் பஞ்சாபின் பங்களிப்பு குறித்து துணை செயலாளர் பிரேமலதா விளக்கினார். முதல்வர் விஆர் பழனிசாமி விருந்தினர்களுக்கு நினைவு பரிசினை வழங்கினார். மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
முன்னதாக பஹ்ரையின் மற்றும் இந்தியாவின் தேசிய கீதம் மற்றும் பள்ளி வழிபாட்டு முறை பாடலை தொடர்ந்து குரான் மற்றும் குரு கிரனத் சாஹிப் ஓதல் நடைபெற்றது.
ஒரு வாரக்காலமாக பஞ்சாபி மொழி பயிலும் மாணவர்களால் நடத்தப்பட்ட போட்டிகளுக்கு இன்று இறுதிப்போட்டி நடைபெற்றது. கையெழுத்து போட்டி, கவிதை ஒப்புவித்தல், ஓவியம் போன்றவை முக்கிய போட்டிகளாக இருந்தது.
போட்டிகளை தவிர பஞ்சாபி கிட்டா நடனம், பஞ்சாபி கவிதைகள், பஞ்சாபி பாடல்கள், பாங்ரா ஆகிய கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றது. ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பஞ்சாப் குறித்து ஒரு சிறப்பான விளக்ககாட்சி அளித்தனர். நன்றியுரையை ஆசிரியர் பர்மிந்தர் கவுர் வழங்கினார்.