ஸ்பைக் என்று பெயரிடப்பட்ட அந்த ஏவுகணைகளை ராணுவ துணைத் தளபதி தனது அவசரக் கொள்முதல் அதிகாரத்தைப் பயன்படுத்தி கடந்த 10 தினங்களுக்கு முன்னரே 210 ஸ்பைக் ஏவுகணைகளையும் அவற்றைச் செலுத்துவதற்கான இயந்திரத்தையும் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் எதிரி நாட்டு டேங்குகளையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டவை இந்த ஸ்பைக் ஏவுகணைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மத்திய ராணுவ ஆராய்ச்சி மையமான டிஆர்டிஓவால் மேம்படுத்தப்பட்ட மனிதர்களால் செலுத்தப்படும் டேங்க் அழிப்பு ஏவுகணைகள் அடுத்த ஆண்டுக்குள் தயாராகவில்லை என்றால், மீண்டும் ஸ்பைக் ரக ஏவுகணைகள் கொள்முதல் செய்யப்படும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.