நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து முதலமைச்சர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அங்கு ஆட்சி அமைக்க எடியூரப்பா முனைப்பு காட்டி வருகிறார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தலைவர் அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்கும் எடியூரப்பா ஆட்சி அமைப்பதற்கு அவர்களின் ஒப்புதல் பெற்று கர்நாடகா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிறகு இன்றே ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே அம்மாநில பாஜகவின் சட்டப்பேரவைக் குழு கூட்டம் பெங்களூருவில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கி உள்ளது.
எடியூரப்பாவை பாஜக சட்டப்பேரவை குழு தலைவராக தேர்வு செய்து அந்தக் கடிதத்தை ஆளுநரிடம் எம்.எல்.ஏ.க்கள் வழங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக மேலிடத்தில் இருந்து ஒப்புதல் கிடைத்த உடன், நடைமுறைகள் தொடங்கும் என்று பாஜக மூத்த தலைவரான சி.டீ.ரவி கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை அன்று முதலமைச்சர் பதவியேற்பு விழா நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
WhatsApp us