சென்னை அயனாவரத்தில் எஸ்.பி.ஐ. ஏடிஎம்-மில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அயனாவரம் கான்ஸ்டபிள் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ. ஏடிஎம்-மில் ஸ்கிம்மர் கருவியும், சிறியரக கேமராவும் பொருத்தப்பட்டிருந்து, கடந்த 17ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடி தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, 2 நபர்கள் தொப்பி அணிந்தபடி வந்து அந்தக் கருவிகளை பொருத்தி இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கையில், திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில்
இரு ஏடிஎம்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டு, வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து 10 லட்சம் ரூபாய்
திருடப்பட்டிருப்பது குறித்த புகார்கள் போலீசிடம் குவிந்தன.
இதுதொடர்பாக விசாரித்த போது அயனாவரத்தில் ஸ்கிம்மர் பொருத்திய கும்பல் தான் இதையும் செய்திருக்கிறது என்பது உறுதியானது.
போலி ஏடிஎம் அட்டைகள் மூலம் அந்தக் கும்பல் பணமெடுப்பது கண்டுபிடிக்கப்படவே, அந்த ஏடிஎம்களின் இருப்பிடங்களைக் கண்டுபிடித்து, வழித்தடங்களைப் பின் தொடந்த போலீசார், கும்பலைச் சேர்ந்த 3 பேரைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஒருவரைத் தேடி வருகின்றனர்.
WhatsApp us