உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளியை முன்னிட்டு சரயூ நதியில் மக்கள் தீபங்களை எரிய விட்டு மிதக்க விட்டனர்.
இதனால் நதிக்கரைகள் எங்கும் வண்ண விளக்குகள் பொன்னொளியால் சுடர் வீசின.தீபாவளி நாளில் சரயூ நதியில் சுமார் ஐந்தரை லட்சம் வண்ண விளக்குகள் எரிந்தபடி மிதக்கவிடப்படுவது இங்கு வழக்கம்.
இதனிடையே டெல்லியில் தீபாவளியை முன்னிட்டு சரோஜினி மார்க்கெட் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற சந்தைகளில் மக்கள் பெரும் திரளாக திரண்டு துணிமணிகளை வாங்கிச் சென்றனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
