ஷோலே படத்தில் இடம்பெற்ற “யே தோசி டீ” பாடலின் பின்னணி இசையுடன் வாழ்த்து கூறிய இஸ்ரேலுக்கு, பிரதமர் நரேந்திரமோடியும் பதில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச நண்பர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் ட்விட்டர் பக்கத்தில் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சார்பில், வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் மோடியும், பெஞ்சமின் நேதன்யாகுவும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்களின் தொகுப்புடன், ஷோலே படத்தில் உள்ள யே தோசி டீ என்ற பாடலின் பின்னணி இசை ஒலிக்கும் வீடியோ ட்வீட்டையும் அந்நாட்டுத் தூதரகம் பதிவிட்டு உள்ளது.
