தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் I8 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. வரும் 26ம் தேதி தமிழகம் முழுவதும் “தாமரை தீபம்” எனும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மோடி திட்டத்தின் மூலம் 3 லட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு வழங்கபட்ட பயனாளிகள்,
மற்றும் 88 லட்சம் பேருக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்களின் குடும்பங்களில் தாமரை தீபம் ஏற்றப்படும்.
வரும் 28ம் தேதி பிரதமர் மோடி தமிழக பாஜக மண்டல் தலைவர்களை காணொலி காட்சி மூலம் 600 பேர் சந்திக்க உள்ளார். ஸ்டாலின் தற்போது தான் பாரளுமன்ற தேர்தலை முன்னிட்டு தொண்டர் சந்திக்க இ.மெயில் முகவரி தருகிறார்.
இந்தியா முழுவதும் ஆயிரம் கூட்டம் நடத்தி மக்களிடம் கருத்தை கேட்டு தேர்தல் வாக்குறுதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஒரு மாதமாக தொழில் முனைவோர், விவசாயிகளை உள்ளிட்டோரை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் தேர்தல் வாக்குறுதிகள் வழங்கப்படும்.
2019 மக்களவை தேர்தலுக்கான பணிகளை பாரதிய ஜனதா முன்னதாகவே ஆரம்பித்து விட்டது
அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க கூட்டணி பிரம்மான்ட கூட்டணியாகவும் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் கூட்டனியாக அமைந்துள்ளது.
தே.மு.தி.க வும் தங்களது கூட்டணியில் விரைவில் இணையும் என நம்பிக்கை உள்ளது
பாரதிய ஜனதா தனித்து விடப்படும், தமிழகத்தில் காலூன்றாது என கூறி வந்த கட்சிகளுக்கு மத்தியில் வழுவான கூட்டணியை தமிழகத்தில் அமைத்துள்ளோம் இலை, பூ, மா இணைந்த கூட்டணி மங்கலகரமான கூட்டணி, தி.மு.க கூட்டணி இழுபறியில் உள்ள கூட்டணி அன்பால் இணைந்த கூட்டணியை பார்த்து சிலர் பதட்டப்படுகிறார்கள் எதிர்கட்சிகள் எவ்வளவு விமர்சனங்கள் செய்தாலும் நல்ல திட்டங்களை முன்வைத்து தேர்தலில் மக்களை சந்திப்போம், என்றார்.
