இந்தோ திபெத் எல்லை காவல் படையில், பணிபுரியும் அபர்ணா குமார் 7 சிகரங்களை தொட்ட முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
உத்தர பிரதேச மாநில பிரிவிலிருந்து போலீஸ் உயர் அதிகாரியாக தேர்வான இவர், இந்தோ திபெத் எல்லை காவல் படையில் டிஐஜியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு மலையேற்ற பயிற்சியை முடித்து கொண்ட இவர், 7 புகழ்பெற்ற சிகரங்களில் ஏறுவதை சவாலாக கொண்டிருந்தார். அதன்படி 6 கண்டங்களில் உள்ள புகழ்பெற்ற சிகரங்களின் உச்சத்தை தொட்ட அவர், 7வதாக வட அமெரிக்காவில் உள்ள தினாலி((Denali)) சிகரத்தை தொட்டுள்ளார்.
கடுங்குளிரையும் பொருட்படுத்தாது, சாதனை நிகழ்த்திய அவரை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். அரசு அதிகாரிகளிலேயே, 7 சிகரங்களை தொட்ட முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்ற பெருமையை அபர்ணா குமார் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
WhatsApp us