ஜூலை ஒன்றாம் தேதி பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ள அத்திவரதர், வரதராஜர் கோவில் குளத்தில் இருந்து நேற்று அதிகாலையிலேயே எடுத்து கோவிலில் வைக்கப்பட்டு உள்ள நிலையில் திங்கட்கிழமை வசந்த மண்டபத்தில் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்று வருவதுடன் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. 24 மணி நேர மின்சாரம், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கோவில் உட்பிரகாரம், தற்காலிக பேருந்து நிலையம், பக்தர்கள் வரிசையில் நிற்கும் பகுதி உள்பட 30 இடங்களில் நூறு கழிவறைகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என் எதிர்பார்க்கும் நிலையில், உள்ளூர் மக்களுக்கு ஆன்லைனில் ஆதார் பதிவு செய்து ஒரு முறை இலவச தரிசனமும், சிறப்பு தரிசனத்திற்கான நுழைவு சீட்டுகள் நகரில் ஆங்காங்கே உள்ள 7 மையங்களில் இன்று முதல் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு அத்திவரதருக்கு மூலிகைகள் மூலம் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
WhatsApp us