ஆந்திராவில் மீன் சந்தையில் விற்பனைக்கு வந்த அமெரிக்க ஓணானை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மச்சிலிப்பட்டினம் என்ற இடத்தில் உள்ள மீன் விற்பனைச் சந்தையில் அமெரிக்காவைச் சேர்ந்த இகுவானா என்ற ஓணான் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு விரைந்த வனத்துறையினர் 2 பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட இகுவானாக்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரைப் பிடித்து விசாரித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
WhatsApp us