காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில் இதுவரை 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லபட்டுள்ளனர்.
சோபியான் மாவட்டத்துக்குட்பட்ட தரம்தோரா கீகம் ((Daramdora Keegam)) என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக் கிடைத்த தகவலின் பேரில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். அப்போது தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே தொடங்கிய துப்பாக்கிச் சண்டையில் இதுவரை 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வரும் நிலையில் தீவிரவாதிகளிடம் இருந்து பல ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாகவும், இறந்த தீவிரவாதிகளை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
WhatsApp us