இந்திய எல்லையின் பெரும்பகுதி கடற்கரையில் அமைந்துள்ளது. இந்தியா, மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டுள்ள நாடு. இதனால், நாட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதில், இந்திய கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது. உலக கடற்படை வரிசையில் இந்திய கடற்படை ஐந்தாவது இடத்தில் உள்ளது.
1971ஆம் ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ‘ஆபரேஷன் டிரிடென்ட்” என்ற பெயரில் டிசம்பர் 4ஆம் தேதி போர் நடந்தது. இதில் இந்திய கடற்படை, பாகிஸ்தானின் துறைமுக நகரான, கராச்சி மீது தாக்குதல் நடத்தியது. இதன் விளைவாக, போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதை நினைவுப்படுத்தும் விதமாகவும், இந்திய வீரர்களின் தியாகங்களை நினைவுக்கூறும் வகையில் கடற்படை சார்பில், டிசம்பர் 4ஆம் தேதி தேசிய கடற்படை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
WhatsApp us