சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கான தூண்டில் எனும் செயலியை அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் ஜெயக்குமார்.
இந்த கைப்பேசி செயலியை தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் மற்றும் இந்திய வானியல் துறையும் இணைந்து உருவாக்கி உள்ளது. இந்நிகழ்ச்சியில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த செயலி மூலம் படகுகள் கடலில் உள்ளது. கரைசேராதவர்கள் விவரம் போன்றவற்றை அறிய முடியும். மழை புயல் விவரங்கள் தெரிந்துகொள்ள முடியும். உடனடியாக தேவையான நடவடிக்கைகளை இந்த செயலி மூலம் எடுக்கவும் இயலும்.
