கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே 60 ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்பாளர்களால் காணாமல் போன கால்வாய் ஒன்று குடிமராமத்து பணியின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலுள்ள வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகளாகவும் விவசாய நிலங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.
கண்டமங்கலத்தில் இருந்து குருங்குடி வரையில் 3 கிலோ மீட்டர் தூரம் புதுவாய்க்கால் என்றழைக்கப்படும் குருங்குடி வாய்க்கால் இருந்துள்ளது. குடிநீருக்கும் பாசனத்துக்கும் பயன்பட்டு வந்த இந்த வாய்க்காலை பல ஆண்டுகளுக்கு முன் விவசாயிகள் சிலர் ஆக்கிரமித்து, முருங்கை, கத்தரி, கொத்தவரை உள்ளிட்டவற்றை பயிரிட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிமராமத்து பணியின் கீழ் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் இங்கு வாய்க்கால் இருந்ததை கண்டுபிடித்தனர்.
தற்போது இந்த வாய்க்காலை மீட்கும் பணியில் அதிகாரிகள் இறங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
WhatsApp us