தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில், ஒரு போக பாசன வசதிக்காக வைகை அணையில் நீர் திறந்துவிடப் பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வந்த நிலையில், பெரியார் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழுள்ள, ஒரு போக பாசன நிலங்களுக்கு வைகை அணையில் இருந்து நீர் திறந்துவிட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 5 தேதி உத்தரவிட்டார்.
உத்தரவின் பேரில் இன்றுமுதல் 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களின் பாசன வசதிக்காக நீர் திறந்து விடப்பட்டது. வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1130 கன அடி நீரை, தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இன்று திறந்து வைத்தார்.
WhatsApp us