ஜூலை மாதம் 22-ம் தேதி அனுப்பப்பட்ட சந்திரயான் விண்கலம் நிலவை நெருங்கி விட்ட நிலையில், தற்போது அதன் சுற்றுவட்டப்பாதை 5வது மற்றும் கடைசி முறையாக நேற்று மாலை 6.21 மணியளவில் மாற்றியமைக்கப்பட்டது.
சந்திராயன் 2ல் உள்ள விக்ரம் என்ற விண்கலம் இன்று பிற்பகல் தனியாகப் பிரிக்கப்படுகிறது. தொடர்ந்து விக்ரம் விண்கலத்தின் உயரம் முதலாவது வட்டப்பாதையில் நாளை காலை நிலவின் உயரத்தில் 120 கிலோ மீட்டர்களில் இருந்து 109 கிலோ மீட்டர்களாக குறைக்கப்படுகிறது.
தொடர்ந்து 4ம் தேதி அதிகாலை 2வது சுற்றுவட்டப் பாதையில் விக்ரம் விண்கலத்தின் உயரம் நிலவின் உயரத்தில் இருந்து 36 கிலோ மீட்டர்களாகக் குறைக்கப்படுகிறது. தொடர்ந்து 7ம் தேதி வரை குறிப்பிட்ட சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வரும் விக்ரம் விண்கலம் வரும் 7ம் தேதி அதிகாலை 1.30 மணியில் இருந்து 2.30 மணிக்குள் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையடுத்து விக்ரம் கலம் தரையிறங்கிய பின்னர், நான்கு மணி நேரம் கழித்து, அதிலிருந்து பிரக்யான் கலம் பிரிந்து நிலாவின் தரையில் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊர்ந்து சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
WhatsApp us