அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி வரும் 22ம் தேதி ஹுஸ்டனில் இந்தியாவில் இருந்து குடியேறியவர்கள் மத்தியில் உரை நிகழ்த்த உள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள டிரம்ப் முடிவு செய்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வமான விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிரம்ப்-மோடி பேச்சுவார்த்தையின் போது இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தகம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்காவும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. மோடியின் நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்றால் அது அந்த ஆதரவை மீண்டும் உறுதி செய்யும்.
WhatsApp us