6 தீவிரவாதிகள் கோவையில் ஊடுருவியிப்பதாக எச்சரிக்கை வந்துள்ளதை, மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உறுதிப்படுத்தியுள்ளார். ராணுவம் மற்றும் விமானப் படை தளங்களில் பாதுகாப்பை உஷார்நிலையில் வைக்குமாறு தகவல் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், தீவிரவாத ஊடுருவல் குறித்த எச்சரிக்கையை அடுத்து, பாதுகாப்பும் கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை என்றார். தீவிரவாதிகள் அல்லது சந்தேக நபர்களின் புகைப்படங்கள் எதையும் காவல்துறை வெளியிடவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்
WhatsApp us