அமேதியில் உள்ள விவசாயிகள் ராஜிவ் காந்தி அறக்கட்டளை கட்டுவதற்காக நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
நிலம் ஏல வழக்கில் , கரிகஞ் எஸ்டிஎம் நீதிமன்றம் நிலங்களை UPSIDC க்கு மீண்டும் வழங்க உத்தவிட்டது. ஆனால் , தற்போது வரை நிலங்களை ராஜீவ் காந்தி அறக்கட்டளை ஆக்கிரமித்து வருகிறது.
அமெதி கரிகஞ்சில் உள்ள விவசாயிகள் புதன்கிழமை போராட்டம் நடத்தினர். தங்களுடைய நிலங்களை தங்களுக்கு தர வேண்டும் இல்லையென்றால் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடினர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதியில் பிரச்சாரத்திற்கு சென்ற போது , விவசாயிகள் , “ இத்தாலிக்கு திரும்பிச் செல், எங்கள் நிலங்களை அபகரித்துவிட்டாய் , நீ இந்தியாவில் இருக்க தகுதியில்லை” என ராகுல் காந்திக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
காங்கிரஸ் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறும் , ஆனால் அனைவரின் கடன்களை தள்ளுபடி செய்துவிட்டு, நிலத்தை கையகப்படுத்துவது தான் ராகுலின் மந்திரம் என கூறினர்.
பிரியங்கா வத்ரா அமேதியில் போட்டியிடுவார் என அறிவித்தாலும், காந்தி குடும்பத்திற்கான எதிர்ப்பு உ.பி.யில் வலுப்பெற்றுள்ளது உண்மை.
