இரண்டரை ஆண்டுக்கு ஒருவர் முதலமைச்சர் என்ற நிலைப்பாட்டில் தற்போது பின்வாங்க முடிவு செய்தால், பா.ஜ.க. கூட்டணியை முறித்துக் கொள்ளலாம் என சிவசேனா கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான ராம்தாஸ் கடாம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில், பா.ஜ.க., சிவசேனா இடையே வரும் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி பேசும் போது, இதற்கு சம்மதம் தெரிவித்தவர்கள் தற்போது அதிகம் சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சியில் இருந்து முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்யலாம் என்று கூறுவது ஏற்க இயலாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
WhatsApp us