இந்தியாவும், பாகிஸ்தானும் விரும்பினால் காஷ்மீர் பிரச்னையில் தான் நடுவராகச் செயல்படத் தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஐநா சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்புடன் இணைந்து ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது பேசிய, மோடி, பயங்கரவாதத்திற்கு எதிராக டிரம்ப் கடுமையான முயற்சி எடுத்து வருவதாக பாராட்டினார். இந்நிலையில் நேற்று அதிபர் டிரம்பை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சந்தித்துப் பேசினார்.
அப்போது காஷ்மீர் பிரச்னை இருநாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நடந்து வருகிறது என்று கூறிய டிரம்ப், இரு நாடுகளும் விரும்பினால், அந்தப் பிரச்னையை நல்ல நடுவராக இருந்து தன்னால் தீர்த்து வைக்க முடியும் என்று தெரிவித்தார். அப்போது பேசிய இம்ரான்கான், ஹவுடி மோடி நிகழ்ச்சியில் மோடியின் பேச்சு ஆக்ரோஷமானதாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் இம்ரான்கானும், டிரம்பும் சந்தித்த பேசிய போது, அப்போதும் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயராக இருப்பதாக டிரம்ப் கூறிய கருத்தை இந்தியா நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
WhatsApp us