இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி பூடான் சென்றடைந்தார். பரோ (Paro) நகரில் பிரதமர் மோடியை பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் (Lotay Tshering) வரவேற்றார். பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி பூட்டான் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் (Jigme Khesar Namgyel Wangchuck), அந்நாட்டுப் பிரதமர் லோட்டே ஷெரிங் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்துப் பேச இருக்கிறார். இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளின் போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
