கேரளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தால் சுமார் இரண்டரை லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். கோழிக்கோடு, மலப்புரம், திருசூர், வயநாடு , கோட்டயம் உள்ளிட்ட பகுதிகள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி அவசியம் ஏற்பட்டால் ஒழிய வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எனப்படும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலப்புரம் பகுதியில் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டன. காவலப்பறா எனுமிடத்தில் நிச்சரிவுகள் ஏற்பட்டதில் வீடுகள் இடிந்து விழுந்தன.
இப்பகுதியில் மீட்புக்குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கிய 58 பேரும் உயிர் பிழைத்திருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்றே கருதப்படுகிறது.
WhatsApp us