தமிழ்

தமிழக காவல்துறையின் புதிய டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமனம்

தமிழக காவல்துறையின் டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். ஜூலை 1ஆம் தேதி அவர் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

தமிழகத்தின் தற்போதைய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக உள்ள டி.கே.ராஜேந்திரனின் பதவிக் காலம் வரும் 30-ந்தேதியுடன் நிறைவடைகிறது. புதிய டிஜிபி ஆக நியமிக்கப்படப்போவது யார் என கேள்வி எழுந்த நிலையில், அதற்கான நியமன விதிகளின்படி, மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை தமிழக அரசு அனுப்பியுள்ளது. மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் சம்மந்தப்பட்ட குழு கூடி, அதில் சிலரின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது.

இந்த பட்டியலை கவனமாகவும், சுதந்திரமாகவும் சீர்தூக்கி பார்த்து, ஜே.கே.திரிபாதியை, தமிழக காவல்துறை தலைவர் பொறுப்பில் டிஜிபி ஆக நியமித்திருப்பதாக தமிழக அரசின் உள்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீருடை பணியாளர் தேர்வாணைய டிஜிபி ஆக இருந்த ஜே.கே.திரிபாதி, சட்டம்-ஒழுங்கு பிரிவு டிஜிபி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். ஜூலை 1ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொள்ளும் ஜே.கே.திரிபாதி 2 ஆண்டுகளுக்கு அப்பதவியை வகிப்பார். தமிழக காவல் துறையில் பல பிரிவுகளில் டிஜிபி அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டாலும், சட்டம்-ஒழுங்கு டிஜிபி பதவிதான் காவல்துறை தலைவர் பதவி என்பது குறிப்பிடத்தக்கது. 

காவல் துறையில் சிறந்த செயல்பாட்டிற்காக இந்தியாவிலேயே இரண்டு சர்வதேச விருதுகளை பெற்ற முதல் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்றால் அது ஜே.கே.திரிபாதி தான். இன்று காவல் துறையில் உள்ள “பீட் ஆபிசர்” “குடிசை பகுதிகளை தத்தெடுத்து இளஞ்சிறார்களை நல்வழிபடுத்தும் திட்டம்” “புகார் பெட்டி” உள்ளிட்ட புதிய முறைகளை தான் திருச்சி காவல் ஆணையராக இருக்கும் போது கொண்டுவந்தார். 1985-ம் ஆண்டு பேட்ச் தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியான திரிபாதி, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் எம்.பில், பிச்டி முடித்து அதன் பிறகு ஐபிஎஸ் அதிகாரியானார். 1985- முதல் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் எஸ்.பியாகவும், பின்னர் டி.ஐ.ஜி-யாக பதவி உயர்வு பெற்று திருச்சி ஆணையராகவும், சென்னை இணை ஆணையராகவும், பின்னர் மதுரை மண்டல ஐஜி-யாகவும் பணியாற்றியவர்.

சிறை துறை, நிர்வாகம், அமலாக்கப்பிரிவு என காவல் துறையின் அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றி கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகவும், இரண்டு முறை சென்னை காவல் ஆணையராகவும் பணிபுரிந்துள்ளார்.

2001-ல் காவல் துறையில் சிறந்த நிர்வாகத்திற்காக ஸ்காட்லாந்து நாட்டில் இவருக்கு தங்கம் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும், 108 நாடுகள் பங்கேற்புடன் நடந்த சர்வதேச காவல் துறை மாநாட்டில் இவருக்கு விருது வழங்கப்பட்டது.

மெச்சதகுந்த பணிக்காக 2002-ல் இந்திய குடியரசு தலைவர் விருதையும், சிறந்த நிர்வாகத்திற்காக 2008-ல் பிரதம மந்திரி விருதையும் பெற்றுள்ளார். சட்டம் ஒழுங்கு பிரிவில் நீண்ட காலம் அனுபவம் உள்ள அதிகாரியான ஜே.கே.திரிபாதி அடுத்த இரண்டுகளுக்கு தமிழக டிஜிபியாக நீடிப்பார்.

35 Comments

35 Comments

  1. Pingback: 조커바카라

  2. Pingback: research in uganda

  3. Pingback: Engineering

  4. Pingback: Dictator Dirk

  5. Pingback: guaranteed ppc reviews

  6. Pingback: copy iwc

  7. Pingback: 4garagedoor.info

  8. Pingback: กู้เงินด่วนมหาสารคาม

  9. Pingback: Dylan Sellers

  10. Pingback: panerai replica

  11. Pingback: satta king

  12. Pingback: Buy marijuana online

  13. Pingback: dang ky 188bet

  14. Pingback: Eddie Frenay

  15. Pingback: airport taxi cheltenham

  16. Pingback: kid

  17. Pingback: Mossberg Guns for Sale

  18. Pingback: Mossberg guns in stock

  19. Pingback: Devops

  20. Pingback: printed cornhole boards

  21. Pingback: michigan state cornhole

  22. Pingback: track1&2 + pin

  23. Pingback: ถ้วยฟอยล์

  24. Pingback: Reputation management experts

  25. Pingback: ถาดกระดาษ

  26. Pingback: elojob

  27. Pingback: buy dmt australia usa

  28. Pingback: buy dmt online canada

  29. Pingback: online mobile number tracker

  30. Pingback: More Help

  31. Pingback: สล็อตวอเลท

  32. Pingback: mushroom spores,

  33. Pingback: buy dmt

  34. Pingback: buy fn guns

  35. Pingback: แอพเงินด่วน

Leave a Reply

Your email address will not be published.

1 + 10 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us