அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக சமரசப் பேச்சு நடத்த உச்சநீதிமன்றம் நியமித்த மத்தியஸ்த குழு தனது அறிக்கையை மூடி சீல் வைத்த உறைக்குள் வைத்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இதுதொடர்பாக சமரசப் பேச்சு நடத்திய முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கலிபுல்லா, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஸ்ரீராம் பஞ்சு ஆகிய மூவர் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த அறிக்கையில் அயோத்தி வழக்கில் முக்கிய பிரதிநிதிகளான சன்னி வக்பு வாரியம், நிர்வானி அகாடா, நிர்மோயி அகாடா, ராம் ஜென்மபூமி புரந்தர் சமிதி மற்றும் சில இந்து அமைப்புகள் சமரசத்திற்கு தயாராக இருப்பதாக மத்தியஸ்தம் செய்த குழுவினர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சர்ச்சைக்குரிய நிலத்தை அரசிடம் ஒப்படைக்க முஸ்லீம் அமைப்பினர் முன்வந்துள்ளதாகவும் அதற்குப் பதிலாக அயோத்தியில் உள்ள இதர மசூதிகளை புதுப்பித்து தர வேண்டும் என்றும் முஸ்லீம்கள் தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் அயோத்தி வழக்கின் இறுதி விசாரணை, முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல், உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
40 நாட்களாக நடைபெற்ற விசாரணை நேற்று மாலை 4 நிறைவடைந்தது.இதையத்து ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.