தமிழ்

லடாக்கில் இந்திய- சீன ராணுவ வீரர்கள் மோதல்

4 LeT terrorists plotting to attack Army camps in Jammu and Kashmir; infiltration bid on through Shopian – Zee News

லடாக் எல்லைப் பகுதியில், இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்குஇடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

லடாக்கில் உள்ள பன்கோங் (Pangong Tso) ஏரி பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 134 கி.மீ நீளமுள்ள இதன் வடக்கு கரை பகுதியின் மூன்றில் இரண்டு பங்கு பகுதி, சீனாவில் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் அருகில் இருக்கும் பல பகுதிகளுக்கு இந்தியாவும், சீனாவும் உரிமை கோரி வருகின்றன

இந்நிலையில், புதன்கிழமை அங்கிருந்த சீன ராணுவத்தினர், ரோந்து பணியில் ஈடுபட்ட இந்திய ராணுவ வீரர்களிடம் மோதல் போக்கில் ஈடுபட்டனர். இது தங்கள் பகுதி என்றும் இங்கிருந்துவெளியேறும்படியும் இந்திய ராணுவத்தினருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. தங்கள் எல்லை பகுதியிலேயே இருப்பதாக, இந்திய ராணுவத்தினர் தெரிவித்தனர். இதனால் மோதல் போக்கு ஏற்பட்டது. நேற்று மாலை வரைஇந்த மோதல் போக்கு நீடித்தது. பின்னர் பேச்சு வார்த்தை மூலம் பிரச்னைத் தீர்க்கப்பட்டுள்ளது.

பிரிகேடியர் தர அதிகாரிகள் தலைமையிலான பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் பேச்சுவார்த்தையை அடுத்து இருதரப்பு பதற் றம் தணிக்கப்பட்டது என்றும் உண்மையான எல்லைக்கட்டுப்பாடு குறித்து மாறுபட்ட கருத்துகள் காரணமாக, இத்தகைய சம்ப வங்கள் நடப்பதாகவும் அவை பெரும்பாலும் இதுபோன்ற பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படுவதாகவும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமர் மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் அடுத்த மாதம் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலை யில், இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதல் போக்கில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

520, Asmi Industrial Complex, Near Ram Mandir Railway Station, Goregaon West, 400104, Mumbai, Maharashtra.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us