சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு 496 ரூபாய் அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது. அந்த வகையில் சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 496 ரூபாய் அதிகரித்து, 26 ஆயிரத்து 976 ரூபாயாக உள்ளது. அதேபோல் ஒரு கிராம் 62 ரூபாய் அதிகரித்து மூவாயிரத்து 372 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 60 காசுகள் வரை உயர்ந்துள்ளது.
சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 60 காசுகள் அதிகரித்து 44 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 600 ரூபாய் அதிகரித்து 44 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.27 ஆயிரத்தை கடந்தது
சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.584 உயர்ந்து ரூ.27,064க்கு விற்பனை.
WhatsApp us