சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரன் 29 ஆயிரம் ரூபாயை கடந்தது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை சவரனுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 28 ஆயிரத்து 824 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 192 ரூபாய் உயர்ந்து 29,016 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 24 ரூபாய் விலை உயர்ந்து 3627 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கடந்த 1-ஆம் தேதி ஒரு சவரன் ஒன்று 26,480 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று வரை 2536 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.
அதே போன்று நேற்று 47 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்ற வெள்ளி விலை 1,400 ரூபாய் உயர்ந்து இன்று 49 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோன்று வெள்ளி கிராம் ஒன்று 1 ரூபாய் 40 காசுகள் விலை உயர்ந்துள்ளது.
WhatsApp us