சீனாவில் விளக்குத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு வடமேற்குப் பகுதியான ஸின்ஜியாங் பகுதியில் நடத்தப்பட்ட நிகழ்வுகள் கண்ணைக் கவரும் வண்ணம் அமைந்திருந்தன.
சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் டிராகன், பொய்க்கால் குதிரை போன்று கலைஞர்கள் நடனமாடினர்.
தொடர்ந்து சீனாவின் பல பகுதிகளில் நிலவு ஆண்டு முடிவடைந்ததை அந்நாட்டு மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். தலைநகர் பெய்ஜிங்கில் லேசர் விளக்குகளின் நிகழ்ச்சி கண்ணைக் கவரும் வகையில் அமைந்திருந்தது.
