இங்கிலாந்து சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மின்சார உட்கட்டமைப்பு, காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி நிறுவனங்களை பார்வையிட்டார். நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதை 2050-க்குள் ஒழிக்க இங்கிலாந்து நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், தமிழகத்திலும் செயல்படுத்துவது குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
இங்கிலாந்தின் சஃபோல்க் நகரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர், அங்குள்ள ஐ.பி. ஸ்விட்ச் ஸ்மார்ட் கிரிட் என்ற நிறுவனத்தில் காற்றாலை மற்றும் சூரியசக்தி மின் உற்பத்திக் கட்டமைப்புகளை பார்வையிட்டார்.
காற்றாலை மற்றும் சூரியசக்தி மின்சாரத்தை மின்கட்டமைப்பில் எளிய முறையில் சேர்க்கும் தொழில்நுட்பங்கள், வழிமுறைகளை அவர் கேட்டறிந்தார். நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரிக்கும் முறையை 2050-ஆம் ஆண்டுக்குள் அறவே ஒழிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், அதற்குள் புதுப்பிக்க வல்ல எரி ஆற்றல் பயன்பாட்டை விரிவாக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனத்தினர் தெரிவித்தனர். அந்த நிறுவனத்தின் திட்டங்களை தமிழகத்திலும் செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை செய்தார்.
WhatsApp us