மக்களவை தேர்தல் வெற்றி என்பது, நேர்மைக்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்திருக்கிறார். இந்தியா முன்னேறிக் கொண்டிருப்பதை, இந்தாண்டு தேர்தல் முடிவுகள் உலகிற்கு எடுத்துக்காட்டியிருப்பதாகவும் ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் கூறியிருக்கிறார்.
ஜப்பான் நாட்டில் நடைபெறும் ஜி-20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கியோகோ மண்டலத்திற்கு உட்பட்ட கோபே நகரில், ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். பிரதமர் நரேந்திர மோடி மேடைக்கு வந்தபோது, அங்கு திரண்டிருந்த இந்தியர்கள், “வந்தே மாதரம்” என்றும், “ஜெய் ஸ்ரீராம்” என்றும் முழக்கமிட்டனர்.
இந்தியர்கள் வாழ்த்து முழக்கங்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அதே உற்சாகத்துடன் தனது உரையைத் தொடங்கினார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடனான நட்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, வெறும் 7 மாதங்களில் ஜப்பானுக்கு மீண்டும் வந்திருப்பது, தமக்கு கிடைத்திருக்கும் அதிர்ஷ்டம் என்றார். இந்தியா மிகச்சரியான பாதையில் முன்னேறிக் கொண்டிருப்பதை, இந்தாண்டு நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் உலகிற்கு உணர்த்தியிருப்பதாகத் தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராக, ஜப்பானுக்கு வந்திருப்பதாக தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, 130 கோடி இந்தியர்கள் வலுவான அரசை உருவாக்கியிருப்பதாக கூறினார். இந்தியாவில், 30 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஒரு அரசு 2ஆவது முறையாக முழு பெரும்பான்மையுடன் ஆட்சி பொறுப்பேற்றிருப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
முன்னதாக, குஜராத்தின் அகமதாபாத் – ஜப்பானின் கோபே நகரங்களுக்கு இடையே, சகோதர நகரங்கள் என்ற திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கையெழுத்தாகியது.
இதற்கிடையே, ஜப்பானின் கோபே நகரில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். பிரதமர் மேடைக்கு வந்தபோது, அங்கு திரண்டிருந்த இந்தியர்கள், “வந்தே மாதரம்” என்றும், “ஜெய் ஸ்ரீராம்” என்றும் முழக்கமிட்டனர்… அப்போது, அங்கிருந்து தமிழர்கள், “பிரதமர் மோடி அவர்களே” என தமிழிலில் வாழ்த்தி முழக்கமிட்டனர்…
இந்தியர்கள் வாழ்த்து முழக்கங்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அதே உற்சாகத்துடன் தனது உரையைத் தொடங்கினார். 7 மாதங்களில் ஜப்பானுக்கு மீண்டும் வந்திருப்பது, தமக்கு கிடைத்திருக்கும் அதிர்ஷ்டம் என்று மோடி குறிப்பிட்டார். இந்தியா மிகச்சரியான பாதையில் முன்னேறிக் கொண்டிருப்பதை, இந்தாண்டு நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் உலகிற்கு உணர்த்தியிருப்பதாகத் தெரிவித்தார்.
WhatsApp us