இத்தாலியின் நபோலியில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் இந்திய வீராங்கனை டத்தி சந்த் தங்கப்பதக்கம் வென்றார்.
100 மீட்டர் தொலைவை 11 புள்ளி 32 நொடிகளில் கடந்து இந்த பதக்கத்தை அவர் பெற்றுள்ளார். ஏற்கனவே 100 மீட்டர் தடகளப் போட்டியில் அவர் 11புள்ளி 24 நொடிகளில் வென்று தேசிய சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து தமது டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கும் டத்தி சந்த் கடும் உழைப்பினாலும் நண்பர்கள் ஆசியாலும் மீண்டும் ஒரு சாதனை.
நூறு மீட்டர் டேஷ் பந்தயத்தில் 11.32 நொடிகளில் கடந்து வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளார். தம்முடன் இதரபோட்டிகளில் வென்ற ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாட்டு வீராங்கனைகளுடன் தமது படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
