அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 5 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
தெமாஜி, லட்சுமிபூர், பிஸ்வநாத் மற்றும் ஜோர்கத் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 43 கிராமங்கள் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாக அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜோர்கத் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா நதி அபாய அளவைத் தாண்டி ஓடுவதால் கரையோரத்தில் குடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே அஸ்ஸாமின் காசிரங்கா தேசியப்பூங்காவில் வெள்ளத்தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் ஒரே சரணாலயமான இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை பயன்படுத்தி 50க்கும் மேற்பட்ட காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டன.
WhatsApp us