மழை வேண்டி கர்நாடகாவில் யாகம் நடத்தப்பட்டது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் தற்போது கடும் வெயிலில் அவதிப்பட்டு வருகின்றன. மேலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவில் மழை பெய்யவேண்டி ஷிவ்மோகாவில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அங்குள்ள பிரசன்ன கணபதி கோயிலில் பகவத் கீதையை வாசித்தும், வேதங்களைப் பாடியும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தின் தோடா பகுதியில் நேற்றிரவு கனமழை பெய்தது. தொடர்ந்து காந்தோ, பத்தர்வா உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
WhatsApp us